அரசாங்கத்தின் 69 இலட்சமும் தற்போது வீதியிலேயே இருக்கின்றது – ஹர்ஷண ராஜகருணா

208 0

அரசாங்கத்துக்கு 69 இலட்சம் மக்களின் ஆணை இருப்பதாக தெரிவித்தாலும் தற்போது 9 பேரும் இல்லை. நாட்டை அழித்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ இப்போதும்  ஆடை அணிந்தா இருக்கின்றார்? என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா சபையில் கேள்வி எழுப்பினார்

பாராளுமன்றத்தில்  நேற்று புதன்கிழமை ஏற்பட்ட நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பான சர்ச்சையின்போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபாய  ராஜபக்ஷ்வை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக 69 இலட்சம் மக்கள் வாக்குகளை வழங்கினர். இன்று அந்த மக்களின் பெரும்பான்மையானவர்கள், ஜனாதிபதி கோட்டாபாய  ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு கோரி வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.  அரசுக்கு  ஆதரவாக 69 இலட்சம் மக்கள் இருப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார். ஆனால்   அரசுக்கு  ஆதரவாக   9 பேர் கூட இல்லை.

நாட்டில் தற்போது ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடி நாங்கள் ஏற்படுத்தியது போன்றே அரசாங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர். இவர்கள் ஆடை அணிந்துகொண்டா இவ்வாறு தெரிவிக்கின்றனர் என கேட்கின்றேன். அதேபோன்று ஜனாபதி நாட்டில் இருக்கின்றாரா என தெரியாது. அவரும் ஆடை அணிந்துகொண்டா இருக்கின்றார் என கேட்கின்றோம் என்றார்.