காலி பிரதேசத்தில் நபரொருவரை தாக்குதலுக்குட்படுத்தி கொலைசெய்தமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தடெல்ல பிரதேசத்திலேயே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபகுதியைச் சேர்ந்த 65 வயதான நபரொருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத் தகராறு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஆண் மற்றும் பெண்ணொருவரை கைதுசெய்துள்ளனர்.
காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

