மத்திய வங்கியில் எந்தவொரு அரசாங்கமும் களவாடவில்லை, ரணிலின் அரசாங்கம் களவாடியுள்ளது

294 0

எந்தவொரு அரசாங்கமும் மத்திய வங்கியில் களவெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், இதுவரையில் மத்திய வங்கியில் எந்தவொரு அரசாங்கமும் களவாடவில்லை, எனினும் ரணிலின் அரசாங்கம் மத்திய வங்கியில் களவாடியுள்ளது.

சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் மக்களின் ஜனாதிபதி எப்போதும் மஹிந்த ராஜபக்ச மட்டுமேயாகும்.

அரசாங்கத்தின் ஒவ்வொரு காய்களாக வெட்டி வீழ்த்தப்படுவதாகவும் இன்னும் சில காய்களே எஞ்சியிருப்பதாகவும் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.