அவசரமாக நாட்டை விட்டு வெளியேறிய மஹிந்தவின் நெருங்கிய உறவினர்

232 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான நிரூபமாக ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் துணை அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ நேற்று இரவு 10.25 மணியளவில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-655 விமானத்தில் பயணித்துள்ளார் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் டுபாய் நோக்கி பயணித்துள்ளார் என இதுவரையில் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ள பிரபலங்களின் பெயர்கள் உள்ளடங்கிய பண்டோரா ஆவணத்தில் நிரூபமாக ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.