அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று காலை டுபாய் செல்லும் விமானத்தில் அவர் நாட்டிலிருந்து புறப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் நேற்று மாலை மாலைத்தீவிற்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

