மஹிந்த ராஜபக்ஷவின் முடிவே தற்போதைய நிலைமைக்கு காரணம்

245 0

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்க்ஷ முன்னிறுத்தப்பட்ட போது முதலில் அதனை எதிர்த்தவர் நான்.

அவர் அரசியலில் ஈடுபட்டதில்லை எனவே அவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம் என்று கூறியபோது மஹிந்த ராஜபக்ச கேட்கவில்லை. அவருக்கு அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான முடிவை எடுத்ததாகவும் அதனால் இன்று முழு நாடும் பற்றி எரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.