ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட ஒன்று- சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

239 0

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட ஒன்று என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் சீனாவின் தொழில் முயற்சிகளுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு ஒரு போதும் இலங்கை அரசாங்கத்திடம் சீனா கோரவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் மக்கள் சரியான முறையில் அறிவுறுத்தப்படாத காரணத்தால் இந்த நிலமை ஏற்பட்டதாக பீஜிங் நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அபிவிருத்தித் திட்டம் குறித்த போதிய தெளிவற்ற காரணத்தினால் இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், இலங்கைக்கு உச்ச அளவில் உதவிகளை வழங்கவே சீனா விரும்புவதாக கூறினார்.

இரு நாடுகளும் வர்த்தக நண்பர்கள் என்ற அடிப்படையில், சீனா சிறந்த உதவிகளை வழங்க உள்ளதாகவும், அது இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவியாக இருக்கும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.