ரணிலின் யோசனைகளை செவிமடுக்க தயார்

263 0

ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் பிரதமர் பதவியை வகித்த முதிர்ச்சியடைந்த அரசியல்வாதி என்பதால் அவரது யோசனைகளை செவி மடுக்க தயார் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஆனால் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றார்.

நேற்று  (30) கண்டி- அஸ்கிரிய பீடத்துக்கு விஜயம் செய்த   பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவில்லை என தெரிவித்த அவர், ரணில் சிறந்த முதிர்ச்சியான  அரசியல்வாதி. எனவே அவரது அபிப்ராயங்கள் மற்றும் கருத்துகளுக்கு செவி சாய்க்க நாம் தயார் என்றார்.

எனினும் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் அவருக்கு தேசியப் பட்டியல் உறுப்பினராகவே தெரிவு செய்தனர் என்றார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் எவர் மீதும் குற்றஞ்சுமத்துவதற்கு முன்னர், இயற்கை மீதே குற்றஞ்சுமத்த வேண்டும். கொரோனா தொற்றால் முழு உலகமே நெருக்கடியை சந்தித்துள்ளது.

அந்நிய செலாவணி பிரச்சினையைத் தீர்ப்பதில் நேச நாடுகளின் உதவிகள் கிடைத்துள்ளன என தெரிவித்த அவர், அரசாங்கத்தின் பெரும்பான்மையை இல்லாமல் செய்யும் அறிக்கைகள் செல்லுபடியாகாது என்பதுடன், அரசாங்கத்தின் பெரும்பான்மையை அசைக்கவே முடியாது என்றார்.

இந்த நேரத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது அமைச்சுக்களின் எண்ணிக்கயையை குறைப்பது அல்ல. மாறாக மேலும் திறம்பட செயல்படுவது என்றார்.