திருநெல்வேலி ஆலயத்துக்கு வந்த முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

240 0

திருநெல்வேலியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு வந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர் திடீரென மயங்கி வீழ்ந்ததை அடுத்து, அங்கிருந்தவர்கள் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்துள்ளனர்.

நோயாளர் காவு வண்டி வந்த சுகாதார உத்தியோகத்தர்கள் முதியவருக்கு முதலுதவி கொடுக்க முயன்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் கோப்பாய் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.