மனைவியுடன் முரண்பட்டுக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்ற ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது.
உரும்பிராயைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் முரண்பட்டுக்கொண்டு இவர் கைதடியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்ற அவர், அங்கு வைத்துத் தீக்குளிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
மதுபோதையில் இருந்த அவரை, அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றபோது வாக்குவாதப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த நபரைக் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

