ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் சாப்பாடு: உணவு டெலிவரி நிறுவனத்திடம் விளக்கம் கேட்க போலீஸ் முடிவு

247 0

ஆர்டர் செய்த பத்து நிமிடங்களில் சாப்பாடு டெலிவரி செய்யப்படும் என தனியார் உணவு டெலிவரி நிறுவனம் அறிவிப்பு தொடர்பாக விளக்கம் கேட்க சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை முடிவு செய்துள்ளது.ஆர்டர் செய்த பத்து நிமிடங்களில் சாப்பாடு டெலிவரி செய்யப்படும் என தனியார் உணவு டெலிவரி நிறுவனம் அறிவிப்பு தொடர்பாக விளக்கம் கேட்க சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை முடிவு செய்துள்ளது.

டெலிவரி செய்யும் நபர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக நிர்வாக அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்த உள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனம் இன்ஸ்டன்ட் என்கிற பெயரில் 10 நிமிடங்களுக்குள் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தது.

இந்த பதிவு உணவு பொருள் ஆர்டர் செய்த உடன் பத்து நிமிடங்களில் எப்படி டெலிவரி செய்ய முடியும் என்ற பல்வேறு சந்தேகங்களை மக்கள் எழுப்பி இருந்தனர். குறிப்பாக குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு மட்டும் இது பொருந்தும் என அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் ஒரு பொருளை ஆர்டர் செய்து, அதனை தயார்செய்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்வது என பத்து நிமிடத்தில் சாத்தியமில்லை என்கிற கருத்துக்கள் பெரிய அளவில் பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தான் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை உணவு டெலிவரி நிறுவனத்திடம் எப்படி பத்து நிமிடங்களில் உணவு பொருட்களை டெலிவரி செய்ய முடியும் என விளக்கம் கேட்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் டெலிவரி செய்யும் நபர் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனத்தை இயக்கினால் சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நிறுவன்த்தின் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.