இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்குவதற்கு தலா ரூ.1 லட்சம்

161 0

விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலை லாபகரமாக மாற்ற 2,500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கடந்த ஆண்டை போலவே 2022-23-ம் ஆண்டிலும் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேளாண்மை தோட்டக்கலை பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு 2022- 23-ம் நிதியாண்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அக்ரி கிளீனிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும்.

விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலை லாபகரமாக மாற்ற 2,500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கடந்த ஆண்டை போலவே 2022-23-ம் ஆண்டிலும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.