சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தாயகத்தில் சமூக வலுவூட்டலுக்காக நடைபெற்ற ஒன்றுகூடல்.

490 0

நேற்றைய தினம் மருதங்கேனி ஆழியவளை பிரதேசத்தில் , பன்னாட்டு பெண்கள் தினத்தை முன்னிட்டு
தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் சமூக வலுவூட்டலுக்காக நடைபெற்ற ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் ஒன்றிணைந்து தாமாகவே இவ் நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்தனர். 300 மக்களுக்கும் மேலாக கலந்து கொண்ட இவ் நிகழ்வில் போராட்டமே வாழ்கையாக மாறியுள்ள அன்றாட வாழ்கையில்
கவலைகளையும் வலிகளையும் மன அழுத்தங்களையும் ஒரு நாளாவது மறந்திருக்கும் வகையில் அனைவரும் இணைந்து ஒன்றாக உணவு சமைத்து சாப்பிட்டு , குழந்தைகளுடன் விழையாடி உடல் / உள ரீதியாக தம்மை தாமே வலிமைப்படுத்தினர் . போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.இவ் நிகழ்வுக்கான முழுமையான நிதியுதவியை பேர்லின் அம்மா உணவகம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு ஆணுக்கு சமமாகவே இருந்தது யாவரும் அறிந்த விடையமே, அதன் தொடர்சியாக இன்றும் தாயகத்தில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் போராட்டங்களிலும் பெண்களின் பங்கு முதன்மையானதும் தனித்துவமானதாகவும் உள்ளது.

அந்த வகையில் அவர்கள் தமது சொந்த சமூகத்தில் மாற்றத்தினை கொண்டு வருவதற்கு வலுவூட்டப்பட்டமை இந்த நிகழ்சிச்திட்டத்தினை தனித்துவமானதாக ஆக்கியிருக்கின்றது.