எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி நேற்று (3) மாலை கொழும்பிலுள்ள ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் தாமரை தடாக சுற்றுவட்டம் அருகில் ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய அமைப்பாளர் சமித் விஜேயசுந்தரவினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றது.
ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாயந்த திஸாநாயக்க அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா, ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவர் ரெஹான் ஜயவிக்ரம,ஐக்கிய இளைஞர் சக்தியின் பௌத்த மத விவகாரங்களுக்கான கொழும்பு மாவட்ட செயலாளர் கோலித குணரத்ன ஆகியோர் உட்பட ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

