உள்ளூர் இழுவைப் படகுகள் தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் வரையினில் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இழுவைமடி வலைகளைப் பயன்படுத்த முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொழும்பு புகையிரத நிலையம் முன்பாக இன்று (28) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டள்ளது.
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், கடந்த ஆட்சியில் இழுவைமடி வலை தடைச் சட்டம் கொண்டு வரப்படடிருந்தது. எனினும் கடற்றொழிலாளர்களின் எதிர்ப்புக் காரணமாக நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

