சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

157 0

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அடையாறில் 522 பேரும், தேனாம்பேட்டையில் 506 பேரும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 1,310 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் தினசரி கொரோனா தொற்று 300-க்கும் கீழ் சரிந்துள்ளது. நேற்று 296 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி ஆனது. கடந்த ஜனவரி மாதம் மத்தியில் தினசரி பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கி வந்த நிலையில் தற்போது அதிவேகமாக குறைந்து வருவது சென்னை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

இதேபோல் கோரோனாவுக்கு சிகிச்சை முடிந்து திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. நேற்றைய புள்ளி விபரப்படி ஒரே நாளில் 842 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 4 ஆயிரத்து 600 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிக பட்சமாக அடையாறில் 522 பேரும், தேனாம்பேட்டையில் 506 பேரும் சிகிச்சையில் இருக்கிறார்கள். மண்டலம் வாரியாக சிகிச்சையில் இருப்பவர்கள் விபரம் வருமாறு:-

திருவொற்றியூர்-158, மணலி-134, மாதவரம்-186, தண்டையார்பேட்டை-191, ராயபுரம்-229, திரு.வி.க.நகர்-287, அம்பத்தூர்-298, அண்ணாநகர்-385, தேனாம்பேட்டை-506, கோடம்பாக்கம்-378, வளசரவாக்கம் -307, ஆலந்தூர்-319, அடையார்-522, பெருங்குடி-355, சோழிங்கநல்லூர்-255.