தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அறுவடைப் பருவக் காலத்தில் இதுவரை 31,600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவரான நீல் டி அல்விஸ் தெரிவித்தார்.
ஒரு கிலோகிராம் நாட்டு நெல் ரூ.90க்கும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் ரூ.92க்கும், கீரி சம்பா ரூ.95க்கும் கொள்முதல் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளைகளுக்கு நெல் கொண்டு வரப்பட்டால் ஒரு கிலோகிராமுக்கு 2 ரூபா மேலதிகமாக வழங்கப்படும்.
அதன்படி ஒரு கிலோ நாட்டு நெல் ரூ.92க்கும், ஒரு கிலோ சம்பா நெல் ரூ.94க்கும், கீரி சம்பா ரூ.97க்கும் கொள்முதல் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

