திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக ஆய்வு

338 0

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக ஆய்வை மேற்கொள்ள திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல் லிமிடெட் தீர்மானித்துள்ளது.

குறித்த ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் வணிகத் திட்டம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, மூன்று முறை கூடி இது தொடர்பாக கலந்துரையாடியது என அமைச்சர் கூறினார்.

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து காணப்படும் எண்ணெய் குத வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கு குறித்த பெற்றோலியம் டெர்மினல் லிமிடெட் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.