28 வயது யுவதி சுருக்கிட்டுத் தற்கொலை

205 0

மஹரகம, பமுனுவ மாவத்தையின் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பகஸ்வெவ, ஹிரியால, தரணகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பெண் சுருக்கிட்ட கயிற்றில் இருந்து மீட்டு நபரொருவரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்றிரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முறைப்பாட்டிற்கு அமைய குறித்த அடுக்கு மாடி குடியிருப்பிற்கு விரைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுகேகொடை குற்றவியல் நிலைய ஆய்வக அதிகாரிகளை அழைத்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.