சனத் நிஷாந்தவுக்கு ஜனாதிபதி கடும் கண்டனம்!

262 0

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தொலைபேசியில் கடுமையாக கண்டித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனத் நிஷாந்த தெரிவித்த கருத்துக்கு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடர்பில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட் டுள்ளார்.

ஜனாதிபதியால் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து இராஜாங்க அமைச்சர் இச்சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.