ஐ.நா.வில் குரல் கொடுப்பேன்! அனந்தி சசிதரன்

255 0

67நாட்டில் ஆட்சிமாறினாலும் காட்சிகள் மாறவில்லை. நல்லாட்சி அரசாங்கம்விரும்பினாலும் சிங்கள கடும்போக்காளர்கள் தமிழர்களுக்கானதீர்வைத்தர விட மாட்டார்கள். எனவே நல்லாட்சி அரசாங்கம் எமக்கானதீர்வைத் தரப் போவதில்லை.

இவ்வாறு கிழக்கின் மட்டு.அம்பாறை மாவட்டங்களுக்கான ஒருநாள்சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்சர்ச்சைக்குரிய வட மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் பயண இறுதியில்தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அனந்தி சசிதரன் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, அம்பாறை, சவளக்கடை, வளத்தாப்பிட்டி, திருக்கோவில், காரைதீவு போன்றபிரதேசங்களுக்கு கொட்டும் மழைக்கு மத்தியில் விஜயம் செய்து பொதுமக்களையும்மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

அவருடன் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும்தமிழரசுக் கட்சியின் காரைதீவுக் கிளை அமைப்பாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்கூடவே சென்றிருந்தார்.

விஜயத்தை முடித்துக்கொண்டு காரைதீவிலுள்ள த.அ.கட்சியின் அம்பாறை மாவட்டக்கிளைபணிமனையில் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது:

கிழக்கு மக்களையிட்டு நான் வேதனையடைகின்றேன். வடக்கிலுள்ள நிலை இங்கில்லை.மக்களும் முன்னாள் போராளிகளும் இன்னமும் இராணுவத்தினரினதும் இராணுவ புலனாய்வாளர்களினதும் அடக்குமுறையின்கீழ் அடக்கிஒடுக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

கிழக்கு மக்களுக்காக நான் இம்முறை ஐ.நா மனிதஉரிமை ஆணைக்குழுவில்குரல் எழுப்பவுள்ளேன். ஐ.நாவில் அமெரிக்கா கொணர்ந்த தீர்மானம் இன்னும்நிறைவேற்றப்படவில்லை. நீர்த்துப்போன தீர்வை இலங்கை அரசுக்காக முன்னெடுக்கும்நிரலதான் அங்குள்ளது.

வடக்கு, கிழக்கு என்பது எமது தாயகம். அதனை ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது.முஸ்லிம் ஒரு சில தலைவர்களை விடுத்து மக்களோடு கலந்துரையாடி அவர்களுக்கானஅதிகாரம் மற்றும் வரப்பிரசாதங்களுக்கான வாக்குறுதிகளை வழங்குவதனூடாக இணைப்பைஉறுதிசெய்தல்வேண்டும்.

அம்பாறை, மட்டக்களப்பு மக்கள் தமது காணிகளையும் இருப்புக்களையும்இழந்துள்ளனர்.

சிங்களக் குடியேற்றம், முஸ்லிம் ஆக்கிரமிப்பு போன்றனவும்இடம்பெற்று வருகின்றன.

இணைப்பிலோ தீர்விலோ அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை எந்தக் காரணம் கொண்டும்விட முடியாது. அவர்களை இணைத்தே எந்த தீர்வும் எட்டப்படவேண்டும்.

கிழக்கு மாகாணசபையில் தமிழ் அமைச்சர்கள் பெயரளவில்இயங்குவதைக் காண முடிகின்றது.

இலங்கையில் இனமுரண்பாடு இல்லை என்பதைக் காண்பிக்க பல பதிவுகளை அரசாங்கம்முன்வைக்கின்றது. தமிழில் தேசியகீதம், எதிர்க்கட்சித் தலைவராக தமிழர், மாவீரர் தினம்கொண்டாடப்பட்டது இப்படிப் பல.

இப்பசப்பு வார்த்தைகளை ஐ.நா.முன்னிலையிலும் கூறுகிறார் எமது பேச்சாளர்சுமந்திரன் எம்.பி. அவர் த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதியா? அல்லது அரசாங்கத்தைக் காப்பாற்றும்அரச பிரதிநிதியா என்று விளங்கவில்லை.

பாதிக்கப்பட்ட எம்போன்ற நியாயவாதிகளின்குரலைக் கேட்காத ஐ.நா. சுமந்திரன் போன்றவர்களின் குரலை நம்புகிறதா?

இலங்கை அரசாங்கம் போர்க்ககுற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க த.தே.கூட்டமைப்புஉடந்தையாக இருக்க மாட்டாது என நம்புகின்றேன்.

2009க்குப் பின்னர் அரசாங்கம் தமிழ் மக்களுக்கென செய்தது என்ன? எதனையும்இடித்துரைக்கக்கூடிய நிலையில் சம்பந்தர் ஜயா இல்லை.

பொறுமை காக்கச் சொல்கிறார்கள். எதுவரை காத்திருப்பது? இழுத்தடிப்புநியாயமான தீர்வைப் பெற்றுத்தராது. குட்டக்கட்ட குனிபவன் மடையன் என்பார்கள்.ஓரளவுதான் பொறுக்கலாம். இந்த அரசாங்கம் தீர்வைத்தரப் போவதில்லை.

88 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவள் நான் .வடக்கில் 38 மாகாணசபை உறுப்பினர்களுள்ஒரேயொரு பெண்மணி. இன்றும் தேவையான செல்வாக்கு எனக்குள்ளது. எத்தனை சவால்களைஎதிர்கொள்ள வேண்டும். வலிகளை உணர்ந்தவள் நான். எதனையும் எதிர்கொள்ள நான்தயாராகவுள்ளேன்.

என்னைப்போல் பாரிய பாதிப்புகளை உடையவர்கள் அனைத்தையும் இழந்தவர்கள்த.தே.கூட்டமைப்பில் இல்லை.

விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவம்இன்றில்லை. ஆசிரியர் இடமாற்றம் ஆளுக்கொரு கொள்கை நிலையான கொள்கை இல்லாமை.இன்னுமின்னும் கடந்த ஆட்சியை குறைகூறிக் கொண்டிருக்க முடியாது.

வடமாகாணசபைபொறுப்பெடுத்து 3 வருடங்களாகின்றன. இந்த வடமாகாண கல்வியமைச்சர் என்ன செய்கிறார்?

காணாமல்ஆக்கப்பட்டவர்கள் மற்றும் விதவைகள் முன்னாள் போராளிகள்தமிழ்அரசியல் கைதிகள் விவகாரம் அனைத்தும் வெறும் பேசுபொருளாக இருக்கின்றனவேதவிர த.தே.கூட்டமைப்பு ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை. இதனால் எத்தனையோகுடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன.

புலம்பெயர் நாடுகள் கிழக்கில் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒவ்வொரு நாடுபொறுப்பெடுத்து போரினால் சின்னாபின்னமான தமிழ்மக்களின் வாழ்க்கை நிலையைகட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

முன்னாள் போராளிகள் பலரை இங்கு சந்தித்தேன். அவர்கள் அச்சத்திலுள்ளனர். எதுவுமெபேசும் நிலையில் அவர்கள் இல்லை. இராணுவ புலனாய்வு இன்னும் அவர்களைவிட்டபாடில்லை.

6வது திருத்த பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். நல்லாட்சிஅரசாங்கம் நல்ல அறிகுறிகளை போரினால் முற்றாக பாதிக்கப்பட்ட தமிழினத்திற்குகாட்ட வேண்டும்.

விகிதாசாரத் தேர்தல் முறையே எமக்குத் தேவை. நல்ல புதியஅரசியலமைப்பு மக்களிடம் கலந்தாலோசித்த பின்னரே நடைமுறைக்கு வரவேண்டும்.

எழுக தமிழ் நடாத்ப்பட வேண்டும். அதுவே தமிழினத்திற்கு பலம் சேர்க்கும். இதுவரைபொங்கல் விழாவை நடாத்த த.தே.கூட்டமைப்பு மட்டக்களப்பில் மக்கள்துயரத்தில்இருக்கும் போது பொங்கல் விழாவை நடாத்துகின்றது.

கிழக்கில் நான் நேற்று வந்தபோது நல்ல அன்பான வரவேற்பைவழங்கியிருந்தனர்.கிழக்குத் தமிழ் மக்கள் அச்சத்திலுள்ளனர்.

அனைத்தiயும்இழந்து இன்னுமொரு சிறுபான்மைச் சமூகத்தின் கீழ் கிடைத்த சந்தர்ப்பத்தையும்தாரைவார்த்து விட்டு வெறும்.ஏதிலிகளாகவுள்ளனர்.

தங்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் போதுமான கவனம்செலுத்துவதில்லையென்ற மனோநிலைமை காணப்படுகின்றது.

அதிமேதகு தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்நிலை இங்கு வந்திருக்காது.

இன்னமும் இதனை அனுமதிக்க முடியாது. கிழக்கு மக்களின் துயரம் குறைகள்கோரிக்கைகள் பற்றி ஐ.நா.வில் குரல் எழுப்பி நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவேன் என்றார்.