கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

264 0

mahi-18முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படாது போனால், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப்புக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் கூட்டு எதிர்க்கட்சியினால் தொடர்ந்து மஹிந்த ராஜபக்சவை தமது தலைவராக ஏற்றுக் கொள்வதில் எவ்வித சாதகமும் இல்லை என தூதுவர் சுட்டிக்காட்டியதாக ஜீ.எல்.பீரிஸ், மஹிந்த ராஜபக்சவிடம் அறவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்து முன்னோக்கி செல்ல முடியாது எனவும், அவரை கைவிடாமல் செயற்படுவதனால் கூட்டு எதிர்கட்சி சிரமத்திற்குள்ளாகும் எனவும் அமெரிக்க தூதுவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மஹிந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்பாகியுள்ள, நாமல் ராஜபக்சவை தேசிய தலைவராக்கும் செயற்பாட்டிற்கு அமெரிக்க அரசாங்கத்தினால் ஆதரவை வழங்க முடியும் என இதன் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பில், இந்த கலந்துரையாடல் தொடர்பிலான தகவல்களை ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்சவும் கலந்துக் கொண்டிருந்தார். எப்படியிருப்பினும் ஜீ.எல்.பீரிஸ் அப்படியே வெளிப்படையாக தகவல் வெளியிட்டமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ச அல்லது ஏனைய கூட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் வெளியாகிய செய்திகளுக்கமைய மஹிந்த ராஜபக்ச தனது அரசியல் வாரிசை இன்னும் இரண்டு மாதங்களில் பெயரிடவுள்ளார்.

அதற்கமைய அமெரிக்க தூதுவர் கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரஸ் உடன் மேற்கொண்ட கலந்துரையாடல் மஹிந்த ராஜபக்சவின் விழிப்புணர்வுடன் இடம்பெற்ற ஒன்றாக இருக்க கூடும் என கூட்டு எதிர்க்கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசாக ஜீ.எஸ்.பீரிஸை பெயரிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதே மஹிந்த ராஜபக்சவின் தற்போதைய அவசியமாகியுள்ளது தெளிவாகியுள்ளதாகவும், இதனால் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், அந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விசேடமாக முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக உள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்தும், யோஷித ராஜபக்சவுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர்களை விடுவித்துக் கொள்வதே மஹிந்தவின் முக்கிய எதிர்பார்ப்பாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி, யோஷித ராஜபக்சவை இந்த நாட்டின் கடற்படை தளபதியாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார். எனினும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கமைய அவரது எதிர்காலம் இருண்ட காலமாகியுள்ளமையினால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

ஷிரந்தியின் தந்தை இந்த நாட்டின் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரி என்ற போதிலும் அவர் கத்தோலிக்கர் என்ற காரணத்தினால் கடற்படை தளபதியாகுவது தடுக்கப்பட்டது. இதனால் யோஷித ராஜபக்சவை கடற்படை தளபதியாக்குவது ஷிரந்தியின் நோக்கமாகியுள்ளது.

எப்படியிருப்பினும் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இனவாதிகள், கடந்த அரசாங்க கவிழ்வதற்கு அமெரிக்க உதவி செய்ததாக குற்றம் சுமத்திய போதிலும், எதிர்காலத்தில் நாமல் ராஜபக்சவை முன்னோக்கி கொண்டு வந்து அந்த குழு அரசியலில் ஈடுபடுவது அமெரிக்காவின் உதவியில் என தற்போது தெரியவந்துள்ளது.