திருவாரூரில் 14-ந் தேதி வரை கோழிக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்-கலெக்டர் தகவல்

251 0

திருவாரூரில் 14-ந் தேதி வரை கோழிக் காய்ச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்காய்ச்சல் நோய் தடுப்பூசி பணி நடைபெறும்.
இதற்காக 14.2.22 வரை கோழிக்காய்ச்சல் நோய் தடுப்பூசி முகாம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை நிலையங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
கோழிக்காய்ச்சல் நோய் தடுப்பு இருவார முகாமிற்காக திருவாரூர் மாவட்டத்திற்கு தடுப்பூசிமருந்து 15 லட்சம் டோஸ்கள் நிர்ணயம் செய்யப்பட்டு முகாம் நடைபெற்று வருகிறது.
எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோழிவளர்ப்போர் 14.2.22 வரை அளிக்கப்படும் இத்தடுப்பூசியினை கோழிகளுக்கு போட்டுக்கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.