மட்டு ஏறாவூரில் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் முகநூலில் மாவீரர் தினத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபகரனின் உருவப்படம் அடங்கிய படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் தலா 2 இலட்;ச்சம் ரூபா சரீரப்பிணயிலும் மாதத்தில் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில்கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் ஏறாவூர்; சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி இன்று புதன்கிழமை (02) பிணையில் விடுவித்துள்ளார்.
கடந்த 2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி அரசால் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மாவீரர்தினத்தையிட்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் அடங்கிய படங்களை முகநூல் புத்தகத்தில் தரவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கே.ஜெகன்இ வை. யோகேஸ்வரன் டபிள்யூ. விவேக் கே. சோபானந்தன் ஆகியேர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதேவேளை கடந்த 2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ம் திகதி தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின் உருவம் அடங்கிய புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்ட வாகரை புளியங்கண்டலடியைச் சேர்ந்த 30 வயதுடைய கு.விஜயதாஸவை கடந்த மாதம் (27) வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பசில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வாகரை பொலிஸ் நிலையத்தில் பகல்; 12 மணிக்கு முன்னர் கையொழுத்து வைக்குமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

