சுதந்திர தினத்தன்று மதுபான, இறைச்சி கடைகளுக்கு பூட்டு

236 0

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து உரிமம் பெற்ற மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் பெப்ரவரி 4 ஆம் திகதி மூடப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

குறித்த தினத்தில‍ை இறைச்சிக் கூடங்களை மூடுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்தா பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான சாலைகளும் மேலதிகமாக அனுமதி பெற்ற ஏனைய அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.