வடமராட்சி – பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வலைகள், தமிழக மீனவர்களால் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளன.
அதனைக் கண்டித்து சுப்பர்மட பகுதியில் படகுகள், வலைகளை வீதியில் வைத்து மீனவர்கள் இன்று (31) வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அவ் வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் வீதியை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

