கொழும்பு, பொரளை பகுதியில் சடலமொன்று இன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை, லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாயொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

