மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டார்

268 0

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆவடி மாநகராட்சியில் முருகேசன் (4-வது வார்டு), ஜெயக்குமார் (32-வது வார்டு), லோகநாதன் (40-வது வார்டு), விக்னேஷ் (48-வது வார்டு) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

அதில் சென்னை, ஆவடி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இதன்படி சென்னை மாநகராட்சி பகுதியில் கன்னிகா பரமேஸ்வரி 19-வது வார்டிலும், சிலம்பரசன் 99-வது வார்டிலும், ஆனந்தி 101வது வார்டிலும், சுமதி 106-வது வார்டிலும், நளினி அலியாஸ் ‌ஷப்ணம் 107-வது வார்டிலும், ராஜலட்சுமி 153-வது வார்டிலும் போட்டியிடுகிறார்கள்.

ஆவடி மாநகராட்சியில் முருகேசன் (4-வது வார்டு), ஜெயக்குமார் (32-வது வார்டு), லோகநாதன் (40-வது வார்டு), விக்னேஷ் (48-வது வார்டு) ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

இது தவிர வெளி மாவட்டங்களில் போட்டியிடுபவர்கள் பெயர் விவரங்களும் இடம் பெற்றுள்ளன.