இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

225 0
எதனோல் வர்த்தகர் ஒருவருக்கு உதவிய இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்மூலங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

கட்டுநாயக்க விமானநிலையத்தின் வி.ஐ.பி பாதையூடாக குறித்த வர்த்தகர் வெளியேற அனுமதித்ததன் மூலம் கைதாவதிலிருந்து தப்பியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனான கலந்துரையாடலையடுத்து குறிப்பிட்ட அமைச்சருக்கு எதிராக முடிவு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் அவரது பதவியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் மூலம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய வர்த்தகர், பின்னர் குறித்த அமைச்சர் மூலமாக பொலிஸில் சரணடைந்ததுடன் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.