புளியம் பொக்கணை பகுதியில் வாகன விபத்தில் இளைஞர் பலி(காணொளி)

454 0

puliyam pokkanaiகிளிநொச்சி புளியம் பொக்கணை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பரந்தன் பகுதியிலிருந்து புளியம்பொக்கணையில் உள்ள தனதுஇளைஞனின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது, எதிர் திசையில் மணல் ஏற்றி பயணித்த லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பணித்த இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
புளியம்பொக்கனை கண்டாவளையை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் என்ற 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.