பாணந்துறையில் இலஞ்சம் கோரிய அதிபர் கைது

261 0

முதலாம் தரத்துக்கு பிள்ளை ஒன்றை அனுமதிப்பதற்காக 150,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை சுமங்கல வித்தியாலய அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில் 200,000 ரூபாவை அதிபர் கோரியதாகவும், பின்னர் அந்தத் தொகையை 150,000 ரூபாவாகக் குறைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.