காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பில் சுகாதார சங்கங்கள் இன்று தீர்மானிக்கும்!

327 0

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுமா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சுகாதார பிரிவின் பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

தாதியர்கள், துணை சுகாதாரப் பணியாளர்கள், பொதுச் சுகாதார ஆய்வாளர்கள், குடும்ப நலப் பணியாளர்கள் உட்பட பல சுகாதாரத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்வார்கள் என
சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் நிவர்த்தி செய்யத் தவறினால், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை மற்றும் அதற்கேற்ப அவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும் தொழிற்சங்க உறுப்பினர்கள் விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சின் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததை பெரும்பான்மையானவர்கள் எதிர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய கூட்டத்தில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.