உணவு பொருட்கள் கேட்டு நார்வேயிடம் தலிபான்கள் பேச்சு

162 0

ரியான பொருளாதார திட்டமிடல் இல்லாததால் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.

 ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றினார்கள்.
ஆனால் அவர்களால் மக்கள் விரும்பும் வகையிலான ஆட்சியை கொடுக்க முடியவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக ஆப்கானிஸ்தான்மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாததால் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மக்கள் பசியும், பட்டினியுமாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடம் தலிபான்கள் கையேந்துகிறார்கள் என்றாலும் உணவுப்பற்றாக் குறையை இன்னமும் தீர்க்க இயலவில்லை. அடுத்த மாதம் இந்தியா கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே தங்களுக்கு உதவுமாறு நார்வே நாட்டிடம் தலிபான் பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்காக ஆப்கானிஸ்தான் வெளியுறவு மந்திரி அமீர் கான் தலைமையில் குழு ஒன்று நார்வே சென்றுள்ளது.
மேலும் ஐ.நா சபையிடமும் தலிபான்கள் உணவு கேட்டு குழு ஒன்றை அனுப்பி உள்ளனர்.