தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா எம்.பி. புகார்

272 0

201701190850397196_Sasikala-Pushpa-MP-Complaint-to-Election-Commission_SECVPFபொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு இருப்பது கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா எம்.பி. புகார் அளித்துள்ளார்.

டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பா, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று புகார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், ‘அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு இருப்பது கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பானது. தேர்தல் ஆணையம் மற்றும் பிரதமர் அலுவலகம் உடனடியாக தலையிட்டு இந்த சட்டவிரோதமான நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் பிரதமருக்கு அனுப்பியுள்ள மற்றொரு கடிதத்தில், ‘மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.