சுயநிர்ணய உரிமை நோக்கிய பாரிஸ் கருத்தரங்கில் பங்கேற்று பலம் சேர்க்குமாறு வேண்டுகிறோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

288 0

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் எமது சுயநிர்ணய உரிமையிலான நிரந்தர அரசியல் தீர்வு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும். தமிழரின் தீர்வைத் தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது ஆண்டுகளைக் கடந்தும் முப்பது ஆண்டுகளாக விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் நடந்தும் இன்றுவரை தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை.

paris icet

back copie

மைத்திரி – ரணில் அரசின் யாப்பு மாற்றம் தமிழர்களுக்கு எந்தவிதமான அரசியல் தீர்வை வழங்கப்போகின்றது?

வடக்குக் கிழக்கு இணைக்கப்பட்டு தமிழர் தாயகத்தில் தமிழர் சுதந்திரமாக வாழ வழி கிட்டுமா?

எமது பாரம்பரிய நிலங்கள் திருப்பி எம்மிடமே ஒப்படைக்கப்படுமா?

தமிழர் தாயகத்தில் புதிதாக முளைக்கும் புத்தர் சிலைகளும் விகாரைகளும் நிறுத்தப்படுமா? போன்ற விடயங்களையும் வலியுறுத்தி எமது தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் ஓர் அங்கமாகவே இந்த பாரிஸ் கருத்தரங்கம் அமைந்துள்ளது.

தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை கொண்ட சுயநிர்ணய உரிமை நோக்கிய பாதையில் உறுதியுடன் செயற்பட்டுவரும் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் மற்றும் பன்னாட்டு மனித உரிமை நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் ((Norway, Canada, England, Finland, Denmark, Germany, Swiss, Sweden, Holland) மற்றும் பிரான்சு நாட்டு அரசியல்வாதிகள், இராசதந்திரிகள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கருத்தரங்கை பிரான்சு பாராளுமன்ற மண்டபத்தில் பிரான்சு நாட்டு பாராளுமன்றத்தில் அமைந்துள்ள தமிழருக்கான நட்பு குழுவினரின் அனுசரணையுடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் துணையுடன் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியத்தை நோக்கிய இக்கருத்தரங்கை வலுவூட்டும் முகமாக தேசவிடுதலையில் பற்றுக்கொண்ட தனிநபர்களோ அமைப்புக்களே பங்கேற்று எமது தாயக விடுதலைக்குப் பலம் சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்,

இந்த மாநாட்டு மண்டபத்தில் வரை அறுக்கப்பட்ட இருக்கைகளே இருப்பதாலும், பாராளுமன்றத்திற்குள் நடைபெறுவதாலும் முன் கூட்டியே உங்கள் பெயர்கள், பிறந்த இடம், நாடு, பிறந்த திகதி ஆகியவற்றுடன் முன் கூட்டியே ஜனவரி மாதம் 24 ஆம் திகதிக்கு முன் colloquedroitcitoyen@gmail.com அல்லது mte.france@gmail.com என்ற மின்னச்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

இந்த மாநாடு பிரஞ்சு பாராளுமன்ற வளாகத்தில் 101 Rue de l’Université Paris 75007, மெட்ரோ Invalides ligne 8-13 என்ற விலாசத்தில் பெப்ரவரி 3 ஆம் திகதி மாலை 2 மணிக்கு ஆரம்பம் ஆகும். இதில் பங்கு பற்றுவோர் முன்கூட்டியே மாலை 1 h 15 க்கு உங்கள் பதிவுகளை உறுதிப்படுத்தும் முகாமாக, முன்கூட்டியே வர வேண்டும்.

தயவுசெய்து மிகவிரைவாக உங்கள் பதிலை எமக்கு அறியத்தரவும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் பின்வருமாறு.

தொலைபேசி இல: 06 52 72 58 67

மின்னஞ்சல்: colloquedroitcitoyen@gmail.com ou mte.france@gmail.com

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை