கோட்டாபயவின் உரை வெறும் குப்பை! பஸிலிடம் சம்பந்தன் பாய்ச்சல்

188 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள் என ஜனாதிபதியின் சகோதரரும் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் சீறி விழுந்து கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.

அதன்பின்னர் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் தகவல் வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. மேலும் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பஸில் ராஜபக்ச விடயத்தைச் சமாளித்து, ‘தாங்க்யூ, தாங்க்யூ…!’ என்று கூறி அங்கிருந்து அகன்றார்” – என்று தகவல் வெளியிட்டார் சுமந்திரன்