கல்முனையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

187 0

கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளுக்கு நாள் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமையால் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகப் பேணி நடந்து கொள்ள வேண்டுமென கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி தெற்கு சுகாதார பிரிவில் வசிக்கும் பொது மக்களிடம் இன்று(18) வேண்டுகோள் விடுத்துள்ளார்..

கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரம் முதல் இதுவரை ( ஜனவரி மாதம் ) கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகப் பேணி நடந்து கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை மிகவும் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றன.

குறிப்பாகச் சமுக இடைவெளி, முககவசம் என்பவற்றை முறையாக அணிந்து கொள்ள வேண்டும் இதன் மூலம் நாம் தொற்று நிலையினை கட்டுப்படுத்த முடியும் பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும் .

அத்துடன் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகிறது இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் மற்றும் முதலாவது இரண்டாவது தடுப்பூசி பெற்றவர்களுக்கான மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தடுப்பூசி நிலையங்கள் தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்று வருகிறது.

பொது மக்கள் தங்களின் நலன் கருதி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் மன கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் .எம். அஸ்மி மேலும் தெரிவித்துள்ளார்.