முள்ளிவாய்க்காலில் நிலத்திலிருந்து மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்

86 0

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த காலபோரின் போது நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் குறித்த பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் அடையாள அட்டை வயர், பற்றரிகள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை இனம் காணப்பட்டு அவை நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய முக்கிய ஆவணங்களே இவ்வாறு நந்திக்கடல் களப்பு பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.