பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானம்!

167 0

பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலதிக நேர கொடுப்பனவுகளில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் செயலாளரான அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுமார் 6,800 பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேலதிக நேர கொடுப்பனவுகளை பெறவில்லை.
நவம்பர் 2017 முதல் மேலதிக நேர கொடுப்பனவு முரண்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் புதிய சுற்றறிக்கையானது குறைந்தபட்ச வேலை நேரத்தை 12 இல் இருந்து 9 ஆக குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீதமுள்ள மூன்று மணிநேரம் மேலதிக நேரமாக கணக்கிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலதிக நேர கொடுப்பனவுகளை நிறைவு செய்வதற்கு 8 மில்லியன் ரூபா தேவை எனவும், பொறுப்புள்ள தரப்பினர் தொகையை விடுவித்து அனைத்து காலதாமதமான கொடுப்பனவுகளையும் பூர்த்தி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அனைத்து கொடுப்பனவுகளும் முடிவடையும் வரை மேலதிக நேர வேலை செய்வதைத் தவிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.