முகேஷ் அம்பானியை முந்திய மெக்டொனால்டு நிறுவன முன்னாள் ஊழியர்

213 0

பினான்ஸ் உலகின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளமாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் பினான்ஸ் காயின் விலை சுமார் 1,300 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

மெக்டொனால்டு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சாங்பெங் ஜாவோ (44). இவர் தற்போது உலகின் முதல் 10 பணக்காரர்களுக்கு இணையான இடத்தைப் பிடித்துள்ளார்.
சாங்பெங் ஜாவோ என்பதைக் குறிக்கும் சி இசட் (CZ) என்ற பெயர் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் மற்றும் கிரிப்டோகரன்சி உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் ஒரு நிறுவனம் தான் பினான்ஸ். இந்த நிறுவனம் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
பினான்ஸ் நிறுவன சேவையை ஐக்கிய அரபு நாடுகளில் விரிவாக்கம் செய்ய சாங்பெங் ஜாவோ அந்நாட்டு அரசு அதிகாரிகளையும், இளவரசரையும் சமீபத்தில் சந்தித்தார். இதன்பின், புர்ஜ் கலிஃபா அருகில் ஒரு அப்பார்ட்மென்டில் பெரிய அளவில் பார்ட்டி கொடுத்தது உலக அளவில் வைரலாகியது.
இந்நிலையில், புளூம்பெர்க் அமைப்பு முதல் முறையாகச் சாங்பெங் ஜாவோவின் சொத்து மதிப்பை ஆய்வுசெய்தது. அவரிடம் இருந்த பினான்ஸ் எக்ஸ்சேஞ்ச், பினான்ஸ் சொத்துக்கள், பினான்ஸ் காயின் மட்டுமே கணக்கிட்டது. அந்த ஆய்வில் சாங்பெங் ஜாவோவின் சொத்து மதிப்புத் தோராயமாக 96 பில்லியன் டாலர் என கணித்துள்ளது.
சாங்பெங் ஜாவோ 2017-ல் உருவாக்கிய பினான்ஸ் நிறுவனம், 5 ஆண்டில் 96 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் மார்க் ஜூக்கர்பெர்க், கூகுள் நிறுவனர் செர்கி பிரின் ஆகியோரையும் தாண்டியிருக்கலாம் என கணித்துள்ளது.