முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமின்

78 0

தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் வேலை வாங்கி தருவதாக் கூறி சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் அவரை கைது செய்ய தேடியநிலையில் தலைமறைவானார்.

பின்னர், 20 நாட்களுக்குப்பின் கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் மதுரையில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்ட இடத்தில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவில் உள்ள சிறைச்சாலையில் ஏன் அடைக்கப்பட வேண்டும். அவரை கைது செய்த விதம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி நிலையில், 4 வாரம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.