நாளாந்தம் 90,000 சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம்

320 0

எதிர்காலத்தில் நாளாந்தம் சுமார் 90,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க  நடவடிக்கைகளை மேற்கொள்வதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று தினங்களில், சந்தைக்கு 220,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் நேற்று(06) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்னும் குறுகிய காலத்துக்குள், சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.