ஒப்பந்தம் கைச்சாத்தானமைக்கு இந்தியா பாராட்டு

226 0

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான உடன்படிக்கை நேற்று (06) கைச்சாத்திடப்பட்டது.

இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம், தனது நன்றியை தெரிவித்துகொண்டுள்ளது.

“இந்திய-இலங்கை பொருளாதார மற்றும் சக்தி பங்குடைமையில் புதியதோர் மைல் கல். திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்காக சகல தரப்பினருக்கும் வாழ்த்துக்கள்“ தெரிவித்து்ளளத.

“இந்திய- இலங்கை தலைமைத்துவங்களின் வழிகாட்டல்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆதரவிற்கும் உளப்பூர்வமான பாராட்டுக்கள்” என்றும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.