முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை- சென்னையில் 2,544 பேருக்கு அபராதம்

226 0

முககவசம் அணியாத 2,544 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவலை அடுத்து சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து போலீசார் முககவசம் அணியாதவர்கள் மீது மீண்டும் நடவடிக்கையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

கடந்த 26-ந்தேதியில் இருந்து நேற்று வரை முககவசம் அணியாத 2,544 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறியதாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 527 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 12 துணை கமி‌ஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 13 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொது மக்கள் கடை பிடிக்கிறார்களா என போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் போலீஸ் நடவடிக்கை பாயும்’’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.