கடமை நேரத்தில் மதுபோதையில் காணப்பட்ட இரு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே மறு அறிவித்தல்வரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுளு்ளனர்.
நேற்று நண்பகல் இவர்கள் கொடிகாமம் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது மதுபோதையில் காணப்பட்டுள்ளனர்.
திடீரென மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையின்போதே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து சாவகச்சேரி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையில், அவர்கள் மதுபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டது.
தற்போது அந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மறு அறிவித்தல்வரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவித்தன.

