தியத்தலாவை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிப் பொருட்களை, தியத்தலாவைப் பொலிசார் இன்று (24-12-2021) மீட்டுள்ளதுடன் வீட்டுரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
தியத்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றினையடுத்து, அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து குறித்த வீட்டை சுற்றி வலைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்
இதன்போது குறித்த வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப் பொருட்கள் அடங்கிய பொதியைக் கண்டுபிடித்து, மீட்டனர்.
அவ் வெடிப் பொருள் பொதியில்,
ஆர்.பி.ஜி. ரக பயிற்சிக்கான வெடிகுண்டு ; 01,
82 மோட்டார் ரக வெட் குண்டு ; 01,
டி. 56 எபோ ரக குண்டுகள் – 147,
எம்.ஐ.எல்.எஸ். ரக கைக்குண்டு ; 01,
வெற்றுமெகசின் – 02,
சன்னப்பெட்டி ; 01,
புகைக்குண்டு 01,
தலைக்கவசம் – 01,
நீர்போத்தல் – 01
ஆகியன அடங்கியிருந்தனவென்று, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.
இதையடுத்து மீட்கப்பட்ட வெடிப் பொருட்களுடன், வீட்டு உரிமையாளரை, பொலிசார் கைது செய்துள்ள நிலையில், தியத்தலாவைப் பொலிசார் தொடர்ந்தும், மேற்படி விடயம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

