ஐநாவின் அதிகப்படியான தலையீட்டை எதிர்க்கும் வெளிவிவகார அமைச்சர்!

271 0

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகப்படியான தலையீடுகளை தாம் எதிர்ப்பதாக வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக பயன்படுத்த தரவுகளை சேகரிப்பதையே நோக்கமாகக் கொண்ட ஐ.நாவினால் விசேட பொறிமுறையொன்றை அமைப்பதற்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

17 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தூதுவர்களை வரவேற்கும் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தரவுகள் என்ன என்பதை அறிய வழி இல்லை என்றும், எனவே அத்தகைய குற்றச்சாட்டுகளின் உண்மையை சோதிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் தூதரகத் தலைவர்களை வரவேற்றதுடன், அவர்கள் அனைவருடனும் வலுவான மற்றும் கணிசமான உறவுகளை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.