எரிபொருள் விலையேற்றத்தால் அனைத்து துறைகளிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன!

241 0

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்த அநீதியான தீர்மானத்தினால் போக்குவரத்து துறை உட்பட அனைத்து துறைகளிலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தற்போதைய நிர்வாகத்தின் திறமையற்ற நிதி முகாமைத்துவமே தற்போதைய அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் என பாராளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் மக்கள் சுமைக்கு ஆளாக நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பலவீனமான நிதி நிர்வாகமே பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.இதனால் ஏற்படும் போக்குவரத்து கட்டண அதிகரிப்பு மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும்.

இறக்குமதி பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உட்பட, எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலையிலும் மேலும் அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருளுக்கான தேவையை குறைப்பதற்கான அரசாங்கங்களின் விளக்கத்தையும் அவர் விமர்சித்தார்,
இலங்கையின் ஒரே மாற்றுத் தலைவர் சஜித் பிரேமதாச என்றும், மாற்று அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தி என்பதை சர்வதேச அரச தலைவர்கள் கூட ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.