பாராளுமன்றில் கடதாசி பாவனையைக் குறைக்கத் தீர்மானம்- சுற்றாடல் அமைச்சு

236 0

பாராளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப் பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்குச் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மேசை களில் அதிகளவிலான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் கடதாசிகள் என்பன காணப்படுவதாகச் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதனடிப்படையில், பாராளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப்பதற்கான புதிய வேலைத் திட்ட மொன்றை நடைமுறைப்படுத்தக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப் பது தொடர்பில் சபாநாயகருக்கு யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கையை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத் திலிருந்து ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.