சப்ரகமுவ மாகாண சுகாதார நிபுணர்கள் இன்று காலை 7 மணி முதல் தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்கின்றனர்.
இதன்படி, மருத்துவ ஆய்வக வல்லுநர்கள், , தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் துணை மருத்துவ சேவை நிபுணர்கள் ஆகியோரே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள மூன்று போதனா மற்றும் பொது வைத்தியசாலைகள், ஆறு ஆதார வைத்தியசாலைகள், 32 கிராமிய வைத்தியசாலைகள் மற்றும் 19 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் செயற்பாடுகள் ஸ்தபிதமடைந்துள்ளன.
சப்ரகமுவ மாகாணத்தில் இன்று இடம்பெறுகின்ற தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல சுகாதார தொழிற்சங்கங்களும் பங்ககேற்பதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் , தங்கள் அது தொடர்பிலான அசெளகரியங்களை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இன்று இரத்தினபுரியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், தொழிற்சங்க நடவடிக்கையின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

